#Breaking: கடுமையாகும் ஊரடங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கடுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோனை மேற்கொண்டு வருகிறார். நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை சில தரவுகளுடன் அமலில் உள்ளது. இருப்பினும், ஊரடங்கை சரியாக பொது மக்கள் பின்பற்றவில்லை என கூறப்படும் நிலையில், ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் அதனை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தடுக்க தளர்வுகளை குறைப்பது குறித்து விவாதிகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிந்த பின் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!
February 27, 2025
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025