தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால்,தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர்.அந்த வகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,2018,மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில்,தூத்துக்குடியில் உள்ள தங்களது ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,மக்களின் எதிர்ப்பு,தமிழக அரசின் அறிவிப்பை முன்னிட்டு தொடர்ந்து ஆலை மூடப்பட்டுள்ளதால் இத்தகைய முடிவை வேதாந்தா நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…