#BigBreaking: ஸ்டெர்லைட் ஆலை – 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.!

Default Image

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது. அரசின் உயர்மட்ட குழு கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி அளித்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவின்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்