#BREAKING: ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் – 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் – தமிழக அரசு

Default Image

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் கொரோனா காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும் என்றும் எந்த காரணத்தை கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எதுவம் செயல்பட அனுமதிக்கப்படாது.

ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். இந்த குழு, ஆக்சிஜன் தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.

மேலும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள ஆகிசிஜன் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் என 5 தீர்மானங்கள் முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்