#Breaking:அனுமதி கேட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Published by
Edison

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலையை மூட முன்னதாக தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து,தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில்,ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு பதில் அளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இரண்டு முறை பட்டியலிடப்பட்டும் விசாரிக்கப்படவில்லை எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,ஸ்டெர்லைட் ஆலையில் ஏராளமான ஜிப்சம் நீக்கப்படாமல் உள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால்,11 மில்லியன் டன் ஜிப்சம் நீக்கப்பட்டிருப்பதாக வேதாந்தா நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.இதற்கு உடனே பதில் அளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு,5 மில்லியன் டன் ஜிப்சம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,பராமரிப்பு பணிக்காக உடனடியாக ஆலையை திறக்க ஸ்டெர்லைட்  நிர்வாகம் அனுமதி கோரிய நிலையில்,அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.மேலும்,ஸ்டெர்லைட் ஆலையை பரமாரிக்க அனுமதி கோரிய நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 

Recent Posts

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

“கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்”… அமைச்சர் ரகுபதி பேச்சு!

சென்னை :  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…

31 minutes ago

“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…

1 hour ago

ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அடி.! சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனுக்கு கேள்வி குறி.?

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…

1 hour ago

“தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.,” த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…

2 hours ago

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு உயர் பொறுப்பு.! யார் இந்த ஆகாஷ் போப்பா?

அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…

2 hours ago

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…

3 hours ago