#BREAKING : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

Default Image

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக  உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 09.10.2021-ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளதால் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம்  கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10,2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பிர் ஓயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் முடுவதற்கு அரசானை எண் 35, உள், மதுமிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள் 27.09.2021-ல் அரசு உத்திரமிட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5. கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஓயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் பிற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செய்வதோ கடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்