சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஜூன் 6-ம் தேதி இந்த மாநில வளர்ச்சி கொள்கையின் குழு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வெளியிடப்பட்டது. இந்த குழுவின் துணை தலைவராக பொருளாதார வல்லுனராக இருக்ககூடிய ஜெய ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்த குழுவின் இரண்டு கூட்டங்கள் துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த குழுவின் தலைவராக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே, 13 பேர் கொண்ட இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறைகள் என்பது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயாரான வரைவு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதனையடுத்து, முதல்வர் எடுக்கக்கூடிய முடிவுகளை பொறுத்து, மாநில வளர்ச்சி கொள்கைக்குழு தங்களது பணிகளை தொடங்கி, பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் என கூறப்பப்டுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…