#Breaking:முதல்வர் தலைமையில்…மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை வாரியம் – தமிழக அரசு அரசாணை!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் படி,மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.அதன்படி,ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
முதல்வர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.இதில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை,மாற்றுதிறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்டோர் சார் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.