#Breaking: நேரில் ஆஜராக உத்தரவு -வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மனு
அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சி துறை முறைகேடு தொடர்பான அறிக்கை அடிப்படையில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் 24ம் தேதி ஆஜராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க அளிக்க கோரியும்,வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த மனுவில்,அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை திசை திருப்பும் நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டாலின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.