#BREAKING: முதல்வரை கடுமையாக ஸ்டாலின் விமர்சிக்க கூடாது – உயர்நீதிமன்றம்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பது தொடர்பாகவும் விமர்சித்த தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டு 4 வழக்குகளை ரத்து செய்தது. மேலும், மீதம்முள்ள 8 வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான வார்த்தைகளை பேசுவது தாக்கத்தை உருவாக்கும். அரசியல் தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு அழகல்ல, நாகரீகமான அரசியலை மேற்கொண்டு பிற மாநிலங்களுக்கு தமிழக கட்சிகள் உதாரணமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான அரசியலை உருவாக்க தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.