திருச்சி நவல்பட்டு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். அப்போது மணிகண்டன்(19) தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு பூமிநாதனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருமயம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், விசாரணையை முடித்து நாளை பகல் 1 மணிக்கு மணிகண்டனை ஆஜர்ப்படுத்தவும் திருமயம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…