#BREAKING : காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்..! 5 பேர் படுகாயம்..!

Default Image

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த 5 மீனவர்களுக்கும் இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்