#BREAKING: சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு..!

சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில்  போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்ததப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி  40 கி.மீ  வேகம் வரை செல்லலாம். இரு சக்கர 50 கி.மீ  வேகம் வரை செல்லலாம். மேலும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ  வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ  வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்