#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறப்பு பேருந்து.!
சென்னை உட்பட 4 மாவட்டங்களில்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது .
இந்த சிறப்பு பேருந்தில் ஆசிரியர் உள்ளிட்டோரும் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.