#BREAKING: ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற சபாநாயகர் உத்தரவு!

சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு. 

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு பின் விளக்கம் அளிப்பேன் என்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை புறக்கணிப்பதற்காக திட்டமிட்டே அமளியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில், பேரவை மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு ஆணையிட்டார். அதன்படி, அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து பேரவையில் இருந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அவரது தரப்பு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் சர்ச்சை நீட்டிக்கும் நிலையில், சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்