பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார்.
பாக்யராஜின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ள நிலையில், மன்னிப்பும் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மாதம், இரண்டு மாதம் முன் பிறக்கும் குழந்தைகளை குறைபிரசவம் என்பார்கள். ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளின் அக்கறையுடன் பார்ப்பவன். இப்போது இல்லை. எப்போதுமே அப்படித்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் நான் பிஜேபி இல்லை. தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று வளர்ந்து வந்துள்ளேன். தமிழ் தான் இதுவரை எனக்கு சோறு போட்டுள்ளது. நான் திராவிட இயக்க தலைவர்களை பார்த்து வளர்ந்தவன். திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தான் எனது சினிமா இருக்கும். இனியும் அது தொடரும் என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…