இனி சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. செங்கள் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.
அதன்படி, மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக சுற்றுசூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்கும் சூழல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.
சாலை, பொதுப்பணித் துறை மற்றும் பிற அரசுப் பணிகள் தடையின்றி நடைபெற சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை திருத்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போா், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் ஆகியோா் மண் எடுக்க அனுமதி தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…