#BREAKING: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற.
பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டியிருந்ததை எதிர்த்து ஜாமீன் கோரியிருந்தார் சிவசங்கர் பாபா. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 16 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை டெல்லியில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.