#BREAKING: ஒற்றை தலைமை – நான்காவது நாளாக ஓபிஎஸ் ஆலோசனை!
சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை.
ஒற்றை தலைமை பிரச்சனை அதிமுகவில் வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே, ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை விஸ்வரும் எடுத்த நிலையில், அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியால் ஒன்றை தலைமை பிரச்சனை பூதாகரமானது. ஒற்றை தலைமை பிரச்சனையை உருவாக்கியவர்களை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியிருந்தார்.
மேலும், பிரதமர் மோடி வலியுறுத்தியதால், துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் சேலம் சென்றிருந்த நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். சேலம் சென்றிருந்த இபிஎஸ்-யும், அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதுபோன்று ஒற்றை தலைமை பேச்சால் பரபரப்பு நிலவி வரும் நிலையில், கட்சி தலைமைகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று நான்காவது நாளாக ஓபிஎஸ் அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.