சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்றது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழு ஒருபுறமும்,ஓபிஎஸ் மற்றொரு புறமும் ஆலோசனை நடத்தி வந்த நிலையில்,தீர்மானக்குழுவுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.இதனையடுத்து,கூட்டம் முடிவுற்றதையடுத்து,அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் தனது இல்லத்திற்கு புறப்பட்டார்.
இந்நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ள நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களுக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில்,கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும்,ஈபிஎஸ் அவர்களுக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்துள்ளனர்.அப்போது அங்கு மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில்,சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் வந்த முன்னாள் பெரம்பூர் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வாய் பகுதியில் தாக்கியதால் சட்டை முழுவதும் ரத்த கறையுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…