#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாக தனி நீதிபதி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவிப்பு.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் கடிதத்தை திரும்ப பெற்றதாக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன் என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இருந்து மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு இரண்டு முறை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதற்கு தனி நீதிபதி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இருப்பினும், வேறு அமர்வுக்கு மாற்றும் முடிவில் இருந்து ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கவில்லை. ஆனால், வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையிட்டது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. இதனை மனுவாக தாக்கல் செய்ய மறுப்பும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி விசாரிக்கக் கோரி கடிதம் அளித்து, திரும்பப் பெற்றிருந்தது ஓபிஎஸ் தரப்பு. கடிதத்தை திரும்பப்பெற்றதாக மனுதாக்கல் செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு வழங்கியது. இதன்பின் அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என  தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனவும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  கூறியுள்ளார்.

இதனிடையே, தன்னை விமர்சித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக ஓபிஎஸ் புகார் தெரிவித்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்கனவே தலைமை நீதிபதி ஏற்க மறுத்த நிலையில், தற்போது வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago