#Breaking:ஒற்றை தலைமை;தனியார் விடுதி – நாளை ஓபிஎஸ் அவசர ஆலோசனை!
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதன்காரணமாக,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில்,சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் நாளை தனியாக ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் தரப்பில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஆனால் இருவரும் சேர்ந்து அழைத்தால்தான் தாங்கள் வருவோம் என்று சில மாவட்ட செயலாளர்கள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம்,ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.