#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

Default Image
  • சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். 
  • வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.

இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு  கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி  நிவாரண நிதி வழங்கப்படும்  என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்