வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக,கூட்டாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு,சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’,என்று தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்,அதிமுகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக,கட்சியை வலுப்படுத்துவது,மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…