நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,மகாராஷ்டிரா,கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில்,”கல்வி நிறுவனத்தின் கூட்டு பரவலைத் தொடர்ந்து,திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது.அந்த வகையில் செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் உள்ளது.இதனால்,சென்னையில் அடையாறு,அண்ணாநகர்,பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனமும்,கொரோனா பரவல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு தேவை,மாறாக கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது “,எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,முதல்,இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களை கண்காணித்து மறுபடியும் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…