#Breaking:அதிர்ச்சி…மீண்டும் அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை – ஒரு லிட்டரின் விலை இவ்வளவா?..!

Default Image

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

மாற்றமில்லை:

petrol

எனினும்,கடந்த நான்கரை மாதங்களுக்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு:

இதனையடுத்து,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் அதிகரிப்பு:

petrol

இந்நிலையில்,இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதிர்ச்சி:

உக்ரைன்- ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகள் அதிகரித்துள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்