#Breaking:இரண்டு மாத குழந்தையை விற்று சூதாட்டம் – தந்தை கைது

Published by
Edison

திருச்சி:உறையூரில் தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது.

திருச்சி மாவட்டம்,உறையூரை சேர்ந்த அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நிசா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,5 வது குழந்தையான தனது இரண்டு மாத ஆண் குழந்தையை விற்று சூதாடிய தந்தை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,குழந்தையை விலைக்கு வாங்கிய தொட்டியம் கீழ சீனிவாச நல்லூரை சேர்ந்த சந்தன குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அப்துல் சலாமின் மனைவி நிசா,தனது குழந்தையை மீட்டு தரக்கோரி உறையூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில்,காவல்துறையினர் இத்தகைய கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையில்,குழந்தையை விலைக்கு வாங்கிய சந்தன குமார்,பல்வேறு கட்டங்களாக,குழந்தையின் தந்தையான சலாமிடம் ரூ.80 ஆயிரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்காரணமாக, காவல்துறையினர் மேலும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

 

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

7 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

8 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

10 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

10 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

11 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

11 hours ago