#BREAKING: அதிர்ச்சி! கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி?

Default Image

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் குரங்கு அம்மை பரவி வருவதால் 4 பேரின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரத்த மாதிரி பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகே இது குரங்கு அம்மையா என்பது குறித்து உறுதி செய்யப்படும். இருப்பினும் தற்போது அதற்கான அறிகுறிகள் இருப்பதால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay