கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,7 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்பட்டது.இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து 7 போரையும் காப்பாற்ற முடியுமா? முடியாதா?என்று கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர்.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலறிந்து,உடனே கடலூர் மாவட்ட எஸ்பி பச்சையப்பன் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனிடையே,கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஆழமான பள்ளத்தில் 7 பேரும் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…