தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர் ,கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்”,என்று கூறினார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை முற்றிலும் தடுக்க தமிழக அரசு முன்வருமா? என்று சட்டப்பேரவையில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதில் அளித்துள்ளார்.மேலும்,கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…