7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என தமிழக அரசு தகவல்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், சாந்தன், ரவி, ஜெயக்குமார் ஆகிய பேரின் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ரவிச்சந்திரன் என்பவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இதற்கிடையில் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 7 பேரின் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஜாமீன் பெற்றுள்ள பேரறிவாளன் வழக்கு மட்டும் அனுப்பப்பட்டதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்த நிலையில், எந்த தேதியில் அனுப்பட்டது என தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இதுதொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…