#BREAKING : செந்தில் பாலாஜி இலகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்…!
செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை என தகவல்.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.