#BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!

Madras high court

செந்தில் பாலாஜி வழக்கை நாளை காலை 10:30-க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் 

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்யப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இருந்தது. மூன்றாவது நீதிபதி முன் விசாரணை தொடங்கி நடைபெற்ற போது இரு தரப்பும் தங்கள் விளக்கங்களை தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து ஜூலை 11,12க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட   மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகையில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறை வசம் இல்லை. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

இந்த நிலையில், கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை பெற செந்தில்பாலாஜி மறுத்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அமலாக்கத்துறை சட்டத்தை மீறி இருந்தால், கூண்டில் ஏற்றி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கு விசாரணையை நாளை காலை 10:30-க்கு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்