#BREAKING: செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு.!
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என பகிரங்கமாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மிரட்டினார். இதையடுத்து தான்தோன்றிமலை போலீசில், கரூர் மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அன்பழகன் புகார் அளித்தார்.
இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ,போலீசார் விசாரித்து வந்தநிலையில் திடீர் மாற்றமாக கரூர் ஆட்சியரை மிரட்டிய புகார் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கரூர் ஆட்சியரை மிரட்டிய வழக்கில், அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.