கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் கடந்த 21-ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் மட்டுமே விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதிகொடுத்தது. இதையெடுத்து போலீசார் தீவிரவாதிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து தமிழக போலீசார் அப்துல் சமீம், தஃபீக் இருவரையும் கேரளா அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…