#Breaking:இதனை மீறும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு!
காவல்நிலையங்களில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள்:
மேலும்,கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கும்,உள்துறை செயலாளருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
பல முக்கிய குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் சாட்சியாக உள்ள நிலையில்,அவை வேலை செய்யவில்லை என்ற பதிலே பெரும்பாலும் அளிக்கப்பட்டு வருகிறது.இதன்காரணமாக,இது குறித்த வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காவல்நிலையங்களில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.