#BREAKING: திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல்!
திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான 2ம் கட்ட தேர்தல் அட்டவணை வெளியீடு.
திமுகவின் கட்சிப் பொறுப்புகளுக்கு தற்போது உள்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அட்டவணையை வெளியிட்டது திமுக தலைமை. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.