#BREAKING : தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு : 

  • 1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு;
  • 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு
  • 12-ம் வகுப்பு – ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு

பொதுத்தேர்வு

  • 2023 மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கும்.
  • 2023 மார்ச் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் தொடங்கும்
  • 2023 ஏப்ரல் 3-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்.

மாணவர்களுக்கு Break Fast எப்போது?

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்