#Breaking:பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்;ஓட்டுநர்,நடத்துநர் மீது கடும் நடவடிக்கை – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்,பள்ளி,கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம்,மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும்,நடத்துனரும் பணியாற்ற வேண்டும் என்றும்,பள்ளி,கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.