#BREAKING: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் – அக்.11 ல் உத்தரவு

Default Image

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அக்.11-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்.11-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு அக்.11-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது. காலி மதுபாட்டிலைகளை திரும்பப்பெறும் திட்டத்தை எப்படி அமல்படுத்தலாம் பரிசீலித்து அறிக்கை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக வனப் பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக, இணையதளத்தில் வெளியான காட்சி அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, தமிழகம் முழுதும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

மலைப் பிரதேசங்களில் மது பாட்டில்களை வீசி செல்வதால், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, பின் காலி பாட்டில்களை ஒப்படைத்து, கூடுதல் ரூபாயை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை போன்ற மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்கா, சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்.11-ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்