#BREAKING: சாத்தான்குளம் வழக்கு ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரணையை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையை தொடங்க உள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நேற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது. இன்று மாலைக்குள் அனைத்து ஆவணங்களும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும் என தூத்துக்குடி செய்தியாளர் சந்திப்பில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தகவல்.