#BREAKING: சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி..!
சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்த சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலா ஜனவரி 26-ஆம் தேதி சிறையில் விடுதலையாவது உறுதி ஆனது. சிறை கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், அதற்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.