அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா மதுசூதனை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க, காரில் அதிமுக கொடியுடன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சசிகலா அவர்கள் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில், மருத்துவர்களிடமும் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை நலவிசாரிக்க எடப்பாடி பழனிசாமி அவர்களும் சென்றுள்ள நிலையில், சசிகலா அவர்களும் நலம் விசாரிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…