#BREAKING : மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா…!

Default Image

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா மதுசூதனை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க, காரில் அதிமுக கொடியுடன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சசிகலா அவர்கள் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில், மருத்துவர்களிடமும்  அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை நலவிசாரிக்க எடப்பாடி பழனிசாமி அவர்களும் சென்றுள்ள நிலையில், சசிகலா அவர்களும் நலம் விசாரிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்