சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும். எனக்கு கட்சி பொறுப்பு தரவில்லை என்பதால் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசவில்லை.
அதிமுகவின் தலைமை சரியில்லாததால் தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி. 4 ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். தனித்தனியாக இருந்ததால் தான் கொங்கு மண்டலத்தை கூட அதிமுக உள்ளாட்சி தேர்தலில் இழந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவுக்கு வரும் காலங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்தார்.
சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வலியுறுத்தி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர். கடந்த வருடம், சரியாக இதே நாளில் கட்சியிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…