#BREAKING : மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி…!
மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனின் உடலுக்கு சசிகலா அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தி சென்றனர். மேலும், மதுசூதனன் அவர்களின் உடல் மதியம் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.