#BREAKING: சசிகலா நடராஜன் நாளை டிஸ்சார்ஜ்..?
சசிகலா நடராஜன் அவர்கள் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும், கொரோனா அறிகுறி இல்லாத கொரோனா உள்ளதாகவும் அவரது உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை 10 மணியளவில் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகிஉள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படும் சசிகலா பிப்ரவரி 3 அல்லது 5 ஆம் தேதி தமிழக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.