#BREAKING: ஜன.27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு.!
வருகின்ற 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தகவல்.
ஜனவரி 27-ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகுகிறார் என அவரது வழக்கறிஞர் கூறியதாக தகவல் கூறப்படுகிறது. சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா விடுதலையாக உள்ளதால் வழக்கு குறித்து அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க கால அவகாசம் தேவை என தெரிவித்துள்ளார். சசிகலா வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 1994-95ல் சசிகலா தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ரூ.4 லட்சம் குறைத்து கட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.