மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில்,அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,ஜெயலலிதா அவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்
அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார். இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.
இளவரசி அளித்த வாக்குமூலம்:
இந்நிலையில்,”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்:
இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியுள்ளார்.
ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு,பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.தற்போது அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல்:
இதனைத் தொடர்ந்து,மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, இவர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து 3 அல்லது நான்கு மாதங்களுக்குள் அரசிடம் ஆணையம் அறிக்கையை சமர்பிக்கும் என்று கூறப்படுகிறது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…