#BREAKING: ஊரக உள்ளாட்சித் தேர்தல் – தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக.!

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் நாளை மறுநாள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
இதனிடையே, விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால், தமிழக அரசியல் கட்சிகள், அதற்கான பணியில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது.
அதன்படி, கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, தளவாய் சுந்தரம், ஓஎஸ் மணியன், ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்சி சம்பத் ஆகிய 9 பேர் தலைமையில் குழுக்கள் அமைத்து, இவர்களுக்கு கீழ் உறுப்பினர்களையும் நியமித்து அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— AIADMK (@AIADMKOfficial) September 4, 2021